» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி: எஸ்பி பரிசு வழங்கினார்!
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 11:25:06 AM (IST)

தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மற்றும் போட்டிகள் நடந்தது.
இதில் கலந்துகொண்டு சிறப்பாக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு முதலிடம் பிடித்த தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்ஸி, 2-ம் இடம் பிடித்த மணியாச்சி சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் 3-வது இடம் பிடித்த கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோரை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜாண் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்ட்டி ரவுடி டீம் காவல்துறையினர் குற்ற பட்டியலிடப்பட்ட இடங்களில் ரவுடிகளை கண்காணித்தும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணியை மேம்படுத்த வேண்டும் என்றும, ரோந்து பணியின்போது காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர்கள் தீபு, ஆறுமுகம் மற்றும் உதவி கண்காணிப்பாளர் மதன், பயிற்சி உதவி கண்காணிப்பாளர் மீரா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










