» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்களை திரட்டுவதற்கான தடை நீட்டிப்பு!
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 11:20:21 AM (IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி வரை நீட்டித்து உள்ளது
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்த வழக்கில், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு (2024) ஜூலை மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டு இருந்தது. சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு 3 மாத காலஅவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்அதே மாதம் 29-ந் தேதி உத்தரவிட்டு உள்ளது.
இதற்கிடையே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தூத்துக்குடி நில எடுப்பு தாசில்தார் எஸ்.சந்திரன், சிப்காட் டாஸ்மாக் டெப்போ மேலாளர் எம்.கண்ணன், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார் பி.சேகர் சார்பில் எம்.எப்.ஹனீஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளான சைலேஷ் குமார் யாதவ், கபில் குமார் கே.சரத்கர், பி.மகேந்திரன், டி.எஸ்.பி.க்கள் பி.லிங்கத்திருமாறன், டி.பார்த்திபன், திருமலை மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சார்பில் வக்கீல் ஜாக்ரதி சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் டு 2-ந் தேதி விசாரித்தது. வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரித்தது. அப்போது துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ், வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நீட்டித்து, விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










