» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி : ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் அறிக்கை

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:40:27 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்த உள்ளதாக ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் மற்றும் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கே.பெருமாள் சாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச் செயலாளராக பெருமாள்சாமி கதிர்வேல் நியமனம்!இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை வேண்டாம் என்பதே மக்களின் நிலைப்பாடு. அது சரியோ தவறோ மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதைப் போல நாங்கள் மக்களோடு இணைந்து ஆலையை நிரந்தரமாக அகற்றக்கோரி மிகப்பெரிய பேரணியை நடத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க உள்ளோம். 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தூத்துக்குடியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை. மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை கண்டித்தும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று மாபெரும் பேரணியை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

ஜெயப்பிரகாஷ்Feb 25, 2025 - 10:45:27 AM | Posted IP 162.1*****

அப்பனும் மகனும் என்ன விளையாட்டு பண்றீங்க. அப்பன் திறக்கனும்னு அறிக்கை விடுறான் மகன் நிரந்தரமா மூடனும்னு அறிக்கை விடுறாங்க.

முருகேசன்Feb 24, 2025 - 10:36:10 PM | Posted IP 172.7*****

அப்பாவும் மகனும் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்

RajaFeb 24, 2025 - 11:46:41 AM | Posted IP 172.7*****

அப்பா திறக்கணுங்கார் மகன் திறக்கவேண்டாம் என்கிறார் . என்னங்கடா இது ?

PEOPLEFeb 24, 2025 - 10:59:32 AM | Posted IP 162.1*****

தயவு செய்து ஸ்டெர்லைட் தமிழக அரசு அகற்ற வேண்டும்" Please Tamil Nadu government should dismantle Sterlite."

முட்டாள்Feb 23, 2025 - 07:45:53 PM | Posted IP 172.7*****

இப்போ நம்ம தலைவரு முதலை அமைச்சர் இருக்காரு ஸ்டெர்லைட்ஐ அப்படியே அறுத்து தள்ளிவிடுவாரு

J. P RAYERFeb 23, 2025 - 07:12:08 PM | Posted IP 172.7*****

நிறைய பார்த்து விட்டோம் யார் போராட்டம் முன் எடுக்கின்றார்களோ அவர்கள் தான் ஸ்டெர்லைட் கை கூலிகளா இருப்பாங்க இனி அவன் திறக்க முடியாது திறக்கும் சூழ்நிலை வந்தால் வராமல் இருக்க என்ன செய்யணுமோ நாங்கள் பார்த்து கொள்வோம்

பகுஜன் லூயிஸ்Feb 23, 2025 - 12:00:44 PM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்ததே காங்கிரசு ஆட்சியில் தானே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory