» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை!
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:22:43 AM (IST)
சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி அடுத்துள்ள அடப்புவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் வைகுண்டம் மகன் பாலகிருஷ்ணன் (19), இவர் கொம்மடிக் கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சாத்தான்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறியதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










