» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1000 லிட்டர் டீசல் பறிமுதல் : ஒருவர் கைது
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:03:21 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் 1000 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த பாலன் என்பவர் திரேஸ்புரம் அருகே மீன்வளத் துறைக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த அவர், 50 லிட்டர் பேரல்களில் தலா 40 லிட்டர் டீசல் வாங்கினாராம். அவற்றில், ஏற்கெனவே 10 லிட்டர் டீசல் இருந்ததாம். சந்தேகமடைந்த ஊழியர்கள் இதுகுறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் பாலனின் வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு பல கேன்களில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அவர் முறைகேடாக பழைய டீசலுடன் புதிய டீசலைக் கலந்து மீன்பிடிப் படகுகளுக்கு விநியோகித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, சுமார் ஆயிரம் லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










