» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரேஷன் கடை ஊழியருக்கு மிரட்டல்: வாலிபர் கைது
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:00:39 AM (IST)
கோவில்பட்டியில் ரேஷன் கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் பாஸ்கரன். சம்பவத்தன்று இவர் பாரதி நகர் மேட்டுத் தெருவில் உள்ள அமுதம் நியாயவிலை கடையில் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் சின்னஜமீன் (33), நியாய விலைக் கடையின் கணக்குகளைக் காண்பிக்குமாறு பாஸ்கரனிடம் தகராறு செய்துள்ளார். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.500-ஐப் பறித்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிந்து சின்னஜமீனை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










