» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மகளிர் பள்ளியில் ரூ.2.06 கோடியில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 9:55:20 AM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.2.06 கோடி மதிப்பில் 2 தளங்களுடன் 11 வகுப்பறைகள் கொண்டதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பிரபாகரன், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயலதா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாரீஸ்வரன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










