» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 9:50:59 AM (IST)
தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியிலிருந்து வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தப்படவுள்ளதாக, கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமர், தலைமைக் காவலர்கள் கோவிந்தராஜ், இருதயராஜ், குமார், இசக்கிமுத்து உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் ரோந்து சென்றனர்.
நேற்று கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 மூட்டைகளைக் கைப்பற்றி, சோதனையிட்டபோது, 80 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் இலங்கை மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். இதனை கடத்த முயன்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










