» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு
வெள்ளி 12, ஜூலை 2024 7:55:52 AM (IST)

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் இரு மார்க்கத்திலும் வாரத்தில் 4 நாள்கள் தற்காலிமாக இயக்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்த ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்காத நிலையில், அண்மையில் நிறுத்தம் வழங்கி, ஜூலை 11 முதல் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதன்படி, நேற்று காலை 11.44 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு வந்த சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசன் தலைமையில் அக் கட்சியினர், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமையிலான நிர்வாகிகள் உள்ளிட்டோர் ரயில் ஓட்டுநருக்கு மாலை, சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
இதில், பாஜக நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலர் வேல் ராஜா, நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ரவிகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
A VANARAJJul 13, 2024 - 05:52:22 PM | Posted IP 162.1*****
இங்கு வந்தே பாரத் ரயில் நிற்க்க பாபாடுபட்ட பாஜக, அதிமுக முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நெல்லை சென்னை வந்தே பாரத் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
TUTY MAKKALJul 13, 2024 - 02:40:29 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடி மக்களுக்கு பயன் அளிக்கும் விதத்தில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தேபாரத் ரயில் நிற்பதற்கு முயற்சித்த பிஜேபி க்கு வாழ்த்துக்கள்.
Srinivasan MariappanJul 12, 2024 - 10:27:18 PM | Posted IP 172.7*****
Tirunelveli jn Chennai Egmore VB also needed Kovilpatti RS stoppages.Kovilpatti Departure 6.40 am and Chennai Egmore Arrival 13.50 ,(மதியம் 1.50 ) very convenient timed VB .
Chennai Egmore departure 14.50 (மதியம் 1.50). Kovilpatti Arrival time 21.40 ( இரவு 9.40) . வசதியான நேரத்தில் சென்னை செல்லலாம்/ திரும்பலாம்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)











சுப்புராஜ்Jul 13, 2024 - 06:41:00 PM | Posted IP 172.7*****