» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நில அளவை விவரங்களை தமிழ் நிலம் செயலி மூலம் பெறலாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 6, ஜூன் 2024 4:26:43 PM (IST)
பொதுமக்கள் இணையதளம் மற்றும் "தமிழ் நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டுப் பயனடையலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tngov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில் பட்டா மாறுதல் – ”தமிழ் நிலம்” கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை Tamil Nilam Citizen Portal https://tamilnilam.tn.gov.in/citizen/ இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பட்டா/சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம்/நகர நிலஅளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservice.tn.gov.in) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விவரங்கள் (correlation statement) போன்றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள / மாவட்டங்கள் / வட்டங்கள் / கிராமங்கள் / மாநகராட்சிகள் நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம்.
எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் ”தமிழ் நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
சாந்திJun 8, 2024 - 10:48:55 PM | Posted IP 162.1*****
நத்தம் காலி ம
னை பட்டா வாங்க வேண்டும்
ராஜாJun 8, 2024 - 05:10:05 PM | Posted IP 162.1*****
In Aatchikadu village, மரக்காணம் Taluk Villupuram District full Bribery ஃபார் issuing Patta subdivision of Genuine Document
ர.ராஜாJun 8, 2024 - 05:05:42 PM | Posted IP 172.7*****
No use went 3 times to give petition ஃபார் subdivision in Villupuram கலெக்டர் he only shows directs hand to his subordinate 2 years passed no Action Taken Report so far and பாலோவுப் மெரெளு waste of everyones Time
R. ArulprakashJun 8, 2024 - 07:46:30 AM | Posted IP 162.1*****
பட்டம் மாற்றுதல் செய்து தர வேண்டும் ஐயா
பத்திரம் உள்ளது பட்டா இல்லை பட்டம் மாற்றுதல் செய்து தர வேண்டும் ஐயா பூலாம்பாடி பேரூராட்சி
K. வெள்ளிங்கிரிJun 7, 2024 - 06:14:22 PM | Posted IP 162.1*****
ஆனால்,பொது மக்கள் சிரமத்தை கஸ்டமர் கேர் ல் பொறுப்பேற்று தீர்த்து கொடுப்பதில்லை. நழுவுவதில் கெட்டிக்காரங்க.
Joseph pushpa dass. DJun 7, 2024 - 04:32:34 PM | Posted IP 162.1*****
ஐயா வணக்கம், நில அளவை உட்பிரிவு தொடர்பாக தனிப்பட்ட வேண்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம், மாவட்ட ஆட்சியரிடம் மூன்று முறை மனு கொடுத்து ஆறு மாத கால தாமதமாகி எந்த நடவடிக்கையும் இல்லை பணிவுடன் வேண்டுகிறேன் செய்து தாருங்கள் தங்களின் நேரில் பார்க்க விரும்புகிறேன் ஐயா,
Joseph pushpa dass. DJun 7, 2024 - 04:13:38 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வேம்பார் பட்டா எண் 344 சர்வே எண் 235 2A 1A நில அளவை சம்பந்தமாக தனிப்பட்ட வேண்டி
முனுசாமிJun 7, 2024 - 03:39:27 PM | Posted IP 162.1*****
. நிலத்தை பட்டா மாற்ற போறேன்
ம.நயினார்Jun 7, 2024 - 03:29:36 PM | Posted IP 172.7*****
பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ஏழைகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க இது உதவியாக இருக்கும்
JayaprakashJun 7, 2024 - 01:46:40 PM | Posted IP 172.7*****
Nalla seydhi
சம்பத்Jun 7, 2024 - 12:58:37 PM | Posted IP 172.7*****
திருவள்ளுவர் மாவட்டம்,ஆவடி மற்றும் திருவள்ளுவர் வட்டங்களுக்கு உட்பட்ட வெள்ளானூர் மற்றும் நத்தமேடு கிராமங்களில் உட்பிரிவு செய்யப்பட்ட புலங்களின் எப்.எம்.பி.வரைபடங்கள் அனைத்தும் இவ்விணையதளத்தில் கிடைக்க ஆவண செய்யவும்.
திவான்Jun 7, 2024 - 07:47:57 AM | Posted IP 172.7*****
நகரம் வரைபடத்தின் G lineOnlione ல் எடுக்க. முடியவில்லை அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்
IintraJun 7, 2024 - 06:46:04 AM | Posted IP 162.1*****
Ok
muruganJun 6, 2024 - 09:44:11 PM | Posted IP 172.7*****
entha website vanthalum - neaaril varasolli lanjam vanguvargal. makkal maravendum
ramarJun 6, 2024 - 05:30:01 PM | Posted IP 172.7*****
ok sir
PadalingamJun 6, 2024 - 04:54:06 PM | Posted IP 172.7*****
Good
PadalingamJun 6, 2024 - 04:51:09 PM | Posted IP 172.7*****
www.tnlandsurvey.tngov.in
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)











சாந்திJun 8, 2024 - 10:52:15 PM | Posted IP 172.7*****