» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் : வேட்பாளர் கோரிக்கை!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 10:01:15 AM (IST)

தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வேட்பாளர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் "தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்ற முறையில் தொகுதிக்கு உட்ப்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். 

15ம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்ப்பட்ட கீழத்தட்டாப்பாறை கிராமத்தில் வாக்கு சேகரித்துவிட்டு வெளியே வரும் போது அங்கே ஊர் பாலத்தில் காத்திருந்த வாலிபர்களில் ஒருவர் என்னை உடைந்த கண்ணாடி பாட்டிலால் குத்த முயன்றார். 

நான் சமயோசிதமாக தப்பித்து சென்று காவல் துறையின் அவசர எண் 100 க்கு அழைத்து எனது புகாரை பதிவு செய்தேன். அதன் படி தட்டப்பாறை காவல் நிலைய அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர். குற்றவாளியை நான் அடையாளம் காண்பித்தேன். ஆனால் எனது புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது காவல்துறை. 

மேலும் எனக்கு பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை தமிழக காவல்துறை எடுக்கவில்லை. நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர் எனக்கே இந்த நாட்டில் இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலையை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது. உடனடியாக எனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கி எனது பாதுகாப்பை உறதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory