» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்!!

திங்கள் 29, ஏப்ரல் 2024 4:37:45 PM (IST)



கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள்  ஊர்வலமாக சென்று நகராட்சி  அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் நாளுக்கு நாள் சாலை ஆக்கிரமிப்பு  என்பது அதிகமாகி வருவதால் மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பது மட்டுமின்றி, போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி விபத்துகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே கோவில்பட்டி  நகராட்சி பகுதியில் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்தது. 

மேலும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு இருக்க கூடிய தற்காலிக ஆக்கிரமிப்புகளை மே 9 ந்தேதி அகற்ற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளை அகற்ற முயற்சி செய்வதாகவும், தமிழக அரசின் அனுமதியுடன் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை அகற்றக்கூடாது, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி  கோவில்பட்டி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சாலையோர வியாபாரிகள் கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனு வழங்கினர்.


மக்கள் கருத்து

கனகராஜ்Apr 30, 2024 - 09:21:30 PM | Posted IP 162.1*****

ஆக்கிரமிப்பு அகற்றுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory