» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொல்லாம்பழம் சீசன் துவங்கியது: கிலோ ரூ100க்கு விற்பனை.

திங்கள் 29, ஏப்ரல் 2024 8:28:01 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தின் கொல்லாம்பழம் சீசன் துவங்கியது. கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான தேரிக்காடு பகுதியில் அதிக அளவில் கொல்லாம்பழம் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த பழமானது கொல்லாம்பலம் எனவும் முந்திரி பழம் எனவும் அழைக்கப்படுகிறது. கொல்லாம் பழ சீசனாது ஏப்ரல், மே ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் மட்டும் இருக்கும். தற்போது மரத்திலிருந்து கொல்லாம்பழம் விற்பனைக்காக பறிக்கப்படுகிறது. 

இந்த பழமானது ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொல்லாம்பழம் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. கொல்லம்பழத்தில் மருத்துவ குணம் உள்ளதாலும், வெயிலுக்கு உகந்தது என்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால மக்கள் வெளியை வருவது குறைந்துளளதால் வியாபாரமும் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்


மக்கள் கருத்து

சந்திரன்Apr 30, 2024 - 10:14:53 AM | Posted IP 162.1*****

ரூபாய் 100 ரெம்ப அதிகம் ரூ50 பொருத்தம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory