» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா!

சனி 6, ஏப்ரல் 2024 4:43:40 PM (IST)



தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. 

விழாவிற்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். மேலாண்மை இயக்குநர் அருண்பாபு, தாளாளர் அகஸ்டி பிரியதர்ஷினி அருண்பாபு கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் வரவேற்றார். 

விழாவில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் அவர் பேசுகையில், "மாணவர்கள் ஒத்துழைப்புடன் கல்லூரி தேசிய பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளை பெற்றுள்ளது. கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் நன்றாக படித்து அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பினை பெற வேண்டும். கல்லூரி நிர்வாகம் நீங்கள் வெற்றி பெறுவதற்கு உதவி செய்து வருகிறது என்று கூறினார். 

கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் ஆண்டறிக்கையையும், மாணவர்களின் சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை பேராசிரியர்களுக்கும், சாதனை படைத்த மாணவர்களுக்கும், அரசு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு கோப்பைகள், பாராட்டு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் ஷினிடர் எலக்ட்ரிக் நிறுவன பொதுமேலாளர் அருண் ஆபிரகாம், நிறுவனர் கிளிட்டஸ் பாபு ஆகியோர் வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக மதுரை முத்து பங்கேற்று மாணவர்களிடையே கலகலப்பாக உரையாடினார். விழாவில், மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. 

விழாவில் பொதுமேலாளர்கள் ஜெயக்குமார்,கிருஷ்ணகுமார், முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் , இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், இயக்குநர்கள் ஜான் கென்னடி, வேலைவாய்ப்பு துறை இயக்குநர் முகமது சாதிக், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் பேராசிரியர் விக்னேஷ் செய்திருந்தார்.


மக்கள் கருத்து

பழைய மாணவன்Apr 6, 2024 - 07:19:46 PM | Posted IP 162.1*****

மாணவர்கள் நன்றாக படித்து பணத்துக்காக துட்டுக்காக காசுக்காக தாய் நாட்டையும், தாய் தந்தையை விட்டு சொகுசாக வாழ வெளிநாட்டுக்கு ஓடணுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory