» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நிறுவனர் தினவிழா

சனி 6, ஏப்ரல் 2024 4:34:03 PM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நிறுவனர் தினவிழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. 

விழாவில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் அசோக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவை முன்னிட்டு கல்லூரியில் துறைகளுக்கு இடையேயான ஆடவர்களுக்கான கிரிக்கெட் மகளிர்க்கான கோ-கோ மற்றும் இருபாலருக்குமான சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் துணை மேலாளர் (ஓய்வு) கிருஷ்ணகுமார் வழங்கினார். 

விளையாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரியின் முன்னாள் மாணவரான கோவை பாரதியார் பல்கலைக்கழக உடற்பயிற்சித்துறை பேராசிரியர் குமரேசன் பரிசுகளை வழங்கினார். மேலும் 2022-2023 ஆண்டுக்கான பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டுநலப்பணித் திட்ட அதிகாரிக்கான விருது பெற்ற விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் ஜெ. நாகராஜன் மற்றும் பல்கலைக்கழக அளவில் சிறந்த அணியாக தேர்வு பெற்ற அணியின் ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமிக்கும் சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பெற்றன. 

கல்லூரி முதல்வர் ஜெ. பூங்கொடி ஆண்டு அறிக்கையினையும் கல்லூரி கணிப்பொறித் தலைவர் ஜோசப்ராஜ் விளையாட்டு விழா அறிக்கையினையும் வாசித்தனர். விழாவிற்கு கல்லூரி செயலாளர் சோமு தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் அசோக் வரவேற்புரையும் வேதியியல் துறை தலைவர் சுகிர்தாதேவியின் நன்றியுரையும் வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் சிறப்பான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory