» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குசாவடி பணியாளர்களுக்கான 2வது பயிற்சி: ஆட்சியர் தகவல்

சனி 6, ஏப்ரல் 2024 12:45:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் வாக்குசாவடி பணியாளர்களுக்கான இரண்டாவது பயிற்சி வகுப்பு நாளை (ஏப்.7) நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு ஆனது 07.04.2024 அன்று காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பயிற்சி மையங்களில் நடைபெற உள்ளது.

சட்ட மன்ற தொகுதி மற்றும் பயிற்சி மையத்தின் பெயர்

213.விளாத்திகுளம் தொகுதி:  சி.கே.டி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, குமாரகிரி, எட்டயபுரம்

214.தூத்துக்குடி: காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி

215.திருச்செந்தூர்: ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டியன் பட்டணம், 

216.ஸ்ரீவைகுண்டம்: கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவைகுண்டம்

217.ஒட்டப்பிடாரம் (தனி): ஜான் டி பாப்பிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, புதியம்புத்தூர்

218.கோவில்பட்டி: நாடார் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி

மேற்கண்ட பயிற்சிக்காக, வாக்குச்சாவடியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் அணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் மூலம் சார்பு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இப்பயிற்சியில் தேர்தல் நடைமுறைகள் குறித்தும் அவர்கள் தேர்தலின்போது பின்பற்ற வேண்டிய சட்டபூர்வ வழிமுறைகள் குறித்தும் விரிவான பயிற்சி வழங்கப்பட உள்ளதால் பணி ஒதுக்கீடு பெற்ற அனைவரும் தவறாது பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 134-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory