» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குறுத்தோலை ஞாயிறு பவனி : திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு!

ஞாயிறு 24, மார்ச் 2024 8:47:33 AM (IST)



தூத்துக்குடியில் தேவாலயங்களில் நடைபெற்ற குறுத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று குருத்தோலை ஞாயிறுயை முன்னிட்டு லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. 

லூர்தம்மாள்புரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்தந்தை. பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பு இருந்து. பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ அவர்கள் தலைமையில் குருத்தோலையை மந்திரித்து, ஜெபம் செய்து பின்னர் இறை மக்கள் கையில் பிடித்தவாறு ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக ஆலயத்துக்கு வந்தனர். பின்னர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

இதைப்போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம் ஆலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.  தவக்காலத்தின் அடுத்த முக்கிய நிகழ்வாக வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும், 31ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory