» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இந்தியா கூட்டணிக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் : அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை

செவ்வாய் 19, மார்ச் 2024 8:24:06 PM (IST)

தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து இந்தியா கூட்டணிக்கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் I.N.D.I.A கூட்டணிக்கட்சி வேட்பாளரின் வெற்றிக்கான பணிகள் குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது.

அதன்படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் 21.03.2024 வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி 2 - ம் கேட் அருகிலுள்ள அபிராமி மஹாலில் வைத்து நடைபெறுகிறது. அதேபோல விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் 21.03.2024 வியாழக்கிழமை மாலை 5.00 மணி அளவில் எட்டையபுரம் சாய்கணேஷ் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.

அதேபோல கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் 21.03.2024 வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் கோவில்பட்டி, மந்தித்தோப்பு ரோட்டிலுள்ள சர்க்கஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அனைத்து செயல்வீரர்கள் கூட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் P.கீதாஜீவனாகிய நான் தலைமை தாங்குகிறேன். கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். 

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் M.LA, காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் AP.C.V.சண்முகம், தி.மு.க சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்க்கண்டேயன், மாநகர மேயர் ஜெகன் பெரயசாமி, மாநகர செயலாளர் S.R.ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர செயலாளர் கா.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் N.ராதாகிருஷ்ணன், மாவட்ட அவை தலைவர் G.செல்வராஜ், மா.கம்யூ மாவட்ட செயலாளர் K.P.ஆறுமுகம், இ.கம்யூ மாவட்ட செயலாளர் P.கரும்பன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் R.S.ரமேஷ், 

வி.சி.க.மாவட்ட செயலாளர்கள், முருகன், கணேசன், இ.யூனியன், முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் P.மீராசா, மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர், ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கயத்தாறு அஸ்மத், சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளர் P.M.அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் N.A.கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் காயல் முருகேசன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் மற்றும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமைப்புகளின் நிர்வாகிகள் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

எனவே அனைத்து செயல்வீரர்கள் கூட்டங்களிலும் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory