» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிச.1ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்!

புதன் 29, நவம்பர் 2023 4:59:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச.1ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 01.12.2023 டிசம்பர் முதல் வெள்ளிக் கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள் / ஊர்த்தலைவர்கள் / மீனவர்கள் அனைவருக்கும், பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

பா.ரிசோபாNov 30, 2023 - 11:42:51 AM | Posted IP 172.7*****

எனது கிராமம் கல்லாமொழி.அங்கு பயணிகள் அமர்வதற்கு நிழற்குடை வசதியை ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

பா.ரிசோபாNov 30, 2023 - 11:38:18 AM | Posted IP 172.7*****

எங்கள் ஊர் கல்லாமொழி என்ற ஒரு சிறிய கிராமம்.அங்கு பயணிகள் அமர்வதற்கு நிழற்குடை இல்லை.எங்களுக்கு மிகவும் தேவையான நிழற்குடை வசதியை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். ‌

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory