» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி : போலீசார் விசாரணை!
புதன் 29, நவம்பர் 2023 11:05:55 AM (IST)
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள சில்லாங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில் அந்த மாணவி நேற்று தலைச்சாயம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










