» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடம்: புதிய இடத்திற்கு மாற்ற மாணவ, மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 27, நவம்பர் 2023 3:09:27 PM (IST)

கோவில்பட்டி அருகே பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடத்திற்கு பதில் புதிய இடத்திற்கு பள்ளியை மாற்றம் வேண்டும் என மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஊத்துப்பட்டி பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பொதுமக்கள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, ஊத்துப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெற்கு குமாரபுரம் ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த ஊரில் ஒரு குழந்தை மட்டுமே படித்து வருகிறார். ஆனால் வடக்கு குமராபுரத்தில் 6 குழந்தைகள், குமராபுரம் காலனியில் 16 குழந்தைகள் பயின்று வருகிறார்கள்.
பள்ளி உள்ள தெற்கு குமராபுரத்தில் எந்த பாதை வசதியும் இல்லை. எனவே பள்ளி செல்லும் குழந்தைகள் 09.11.2023 அன்று முதல் இன்று வரை பள்ளிக்கு செல்லவில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பள்ளியை குமாரபுரம் காலனிக்கு மாற்றி புதிய பள்ளி கட்டிடம் வழங்கினால் குழந்தைகள் எவ்வித சிரமம்மின்றி சென்று வர வசதியாக இருக்கும். அதற்கு வசதியாக குமராபுரம் காலனி அருகில அரசு தரிசு நிலம் உள்ளது. இதை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பள்ளி கட்டிடத்தை புதிய இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










