» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை!
திங்கள் 27, நவம்பர் 2023 12:08:21 PM (IST)

நாசரேத் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை கடையனோடை தூய தோமா ஆலயத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை கடையனோடை தூய தோமா ஆலயத்தில் நடைபெற்றது. சபை மன்றத் தலைவர் வெல்ற்றன் ஜோசப் தலைமை வகித்தார். திருமண்டல உயர்நிலை மேல்நிலை, சிறப்பு பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், லே செயலாளர்நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், திருமண்டல உபதலைவர் வி.எம்.எஸ். தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக், கடையனோடை சேகரத் தலைவர் ஆசீர் சாமுவேல்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்கஇயக்குநர் மற்றும் செயலருமான ராபின்சன்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத்திலுள்ள அனைத்து சேகர ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் சிறப்பு பாடல் பாடினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத் தலைவர் வெல்ற்றன் ஜோசப் தலை மையில் சேகர குருவானவர் கள் செய்திருந்தனர்.
இதில் சேகரகுருவானவர்கள் ஞானசிங் எட்வின், செல்வராஜ், ஜோசுவா, ஹென்றி ஜீவானந்தம், ரூபன் மணிராஜ், டிக்சன், கமல்சன், ரஞ்சித்,வெஸ்லி ஜெபராஜ், ஜெபஸ், வேதநாயகம், பாஸ்கரன், ஜான் சாமுவேல், டேனியல் ஆல்பர்ட், தேவராஜ் ஞான சிங்,டீக்கன்கள் அற்புதராஜ், பால்ராஜ், பில்லி ஜெபராஜ்உட்பட சபை மன்றத்தில் உள்ள ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










