» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தகராறு செய்து கொலை முயற்சி: சிறுவன் உட்பட 5பேர் கைது!
ஞாயிறு 26, நவம்பர் 2023 1:30:05 PM (IST)
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 5பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கீதாஜீவன் நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் மகன் சக்திவேல் (20) என்பவருக்கும் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த போத்தா ரவி மகன் வேல்முருகன் (எ) பானா (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேல்முருகன் (எ) பாணாவின் சகோதரர் ஒருவர் கடந்த 24.11.2023 அன்று மாரடைப்பால் இறந்த நிலையில் அந்த துக்க நிகழ்விற்கு மேற்படி சக்திவேல் கலந்து கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் (எ) பாணா தனது சகோதரரான கண்ணன் (19), தனது நண்பர்களான தூத்துக்குடி பாரதிநகரை சேர்ந்தவர்களான ஜேசுராஜ் மகன் கெனி வினிஸ் (19), முருகன் மகன் வேல்முத்து (எ) முத்துவேல் (19), ஆத்தூர் தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் முத்துக்குமார் (21), தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் மற்றும் சிலருடன் சேர்ந்து கடந்த 24.11.2023 அன்று இரவு சக்திவேலின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் தகராறு செய்து தவறாக பேசி அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி கீதாஜீவன் நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேலின் பெரியம்மா நேற்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கண்ணன், கெனி வினிஸ், வேல்முத்து (எ) முத்துவேல், முத்துக்குமார் ஆகியோரை கைது செய்தும் இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கண்ணன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், திருநெல்வேலி நகரம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










