» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாட்கோ மூலம் ரூ.17.98கோடி கடன் வழங்கல் : நெல்லை மாவட்ட மேலாளர் தகவல்!
வெள்ளி 24, நவம்பர் 2023 4:49:17 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தாட்கோ மூலம் 543 பயனாளிகளுக்கு வங்கி கடனாக ரூ.17 கோடிய 98லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடனில் தாட்கோ மானியக்கடன் தொகையாக ரூ.7,36,39,000/- வழங்கப்பட்டுள்ளது என தாட்கோ மேலாளர் செல்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மக்களுக்கு தாட்கோ மூலம் இணையதளம் வாயிலாக http:/application.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாதம் ஒருமுறை நேர்காணல் நடத்தி அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து தகுதியிருப்பின் மானியம் வழங்கப்படுகிறது. பின்பு வங்கிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி அதன் மூலம் வங்கியில் படிவம்-3 பெறப்பட்ட பின்பு மேற்கண்ட மானியம் ஒரு லட்சத்துக்கு ரூ.30,000/- வீதம் (சதவீதம் 30மூ) அதிகபட்சம் ஆதிதிராவிடர்களுக்கு ரூ.2,25,000/-ம் மானியமும் பழங்குடியினருக்கு 35% அதிகபட்சமாக ரூ.3,75,000/-ம் வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 277 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. 156 நபர்கள் கலந்து கொண்டார்கள் என்றும், அவ்விண்ணப்பங்களில் 111 நபர்களை வங்கிக்கு தேர்வு செய்து படிவம்-3 பெறப்பட்டு வங்கி கடன் ரூ.2,87,62,000/-ம் அதில் தாட்கோ மானியம் ரூ.13,750,000/- வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று 2022-23-ம் நிதியாண்டில் திட்டத்தின் கீழ் 530 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டு வங்கி மூலம் 300 (விண்ணப்பங்கள்) பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வங்கி கடனாக ரூ.9,98,78,000/-ம் வழங்கப்பட்டு தாட்கோ மூலம் மானியத் தொகை ரூ.3,94,46,000/-ம் வழங்கப்பட்டுள்ளது.
2023-24 நிதி ஆண்டில் 01.04.2023 முதல் 31.10.2023 வரை 7 மாதங்களில் 458 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 140 விண்ணப்பங்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். இதில் மேற்கண்ட விண்ணப்பங்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டு வங்கியின் மூலம் 132 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் அவர்களுக்கு வங்கி கடனாக ரூ.5,12,45,000/-ம் தாட்கோ மானியத் தொகை ரூ.2,04,43,000/-ம் விடுவித்து ஆணையிடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 543 பயனாளிகளுக்கு வங்கி கடனாக ரூ.17,98,85,000/-ம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடனில் தாட்கோ மானியக்கடன் தொகையாக ரூ.7,36,39,000/- வழங்கப்பட்டு 543 பயனாளிகளின் வாழ்வாதாரம் முன்னேறி உள்ளது.
தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழு திட்டம் போன்ற திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் இணையதளம் வாயிலாக http:/application.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட தாட்கோ மேலாளர் செல்வி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)











Man kandan.kApr 28, 2025 - 11:03:36 AM | Posted IP 162.1*****