» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 32 ஊர்காவல் படை வீரர்களுக்கு பதவி உயர்வு: எஸ்பி உத்தரவு!

புதன் 22, நவம்பர் 2023 7:59:23 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 330 படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மேற்படி ஊர்க்காவல் படையினருக்கு 2010ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதன்பின்பு இதுவரை பதவி உயர்வு வழங்கபடாத நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன் ஊர்க்காவல் படையினருக்கு பதவி உயர்வு அளிக்க தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளவாய் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து தகுதியான வீரர்களை தேர்வு செய்ய உத்தவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி குழுவினர் மதிப்பெண்கள் அடிப்படையில் பல வருடங்களாக தன்னார்வ தொண்டாக கருதி பணிபுரியும் தகுதியான 32 வீரர்களை தேர்வு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை செய்தனர்.

மேற்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் படைப்பிரிவு தளபதி (PC) ராமகிருஷ்ணன் படை தளபதியாகவும் (CC), துணை படைப்பிரிவு தளபதி (APC) உலகம்மாள் படைப்பிரிவு தளபதியாகவும் (PC), குழு தலைவர்களான (SL) செல்வ போதகர் மற்றும் பிரின்ஸ் கிரிஸ்டியா ஆகியோர் துணை படைப்பிரிவு தளபதிகளாகவும் (APC), உதவி குழு தலைவர்களான (ASL) கைலாஷ் குமார், வெங்கடாச்சலம் மற்றும் ஆறுமுகசிவம் ஆகியோர் குழு தலைவர்களாகவும் (SL), ஊர்க்காவல் படைவீரர்களான (HG) ஜெபராஜ் கிரிஸ்டோ டேவிட், சிவஞானம், மகேஷ்குமார், ஆனந்த், அருள், சிவகுமார், மாரிசங்கர், சிவசங்கர், ஜெயா, சரிதா, செல்வி. செல்வஈஸ்வரி, மாரியப்பன், பால் சாமுவேல், ஜெபராஜ்ராஜன் பொன்னையா, காசி பாலன், செல்வகுமார், பொன்னம்பலம், அருண்சங்கர், செல்லதுரை, தவமணி, சிவக்குமார், அய்யப்பராஜ், பாலாஜி, கணேசன் மற்றும் வேலுமணி ஆகியோர் உதவி குழு தலைவர்களாகவும் (ASL) பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன் இன்று (22.11.2023) உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து

S.mari muthuNov 24, 2023 - 08:03:41 PM | Posted IP 172.7*****

ஊர்காவல் படையில் எப்படி செய்வது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory