» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சலூன்களுக்கு மானிய விலையில் மின்சாரம் : முடிதிருத்துவோர் சங்கம் கோரிக்கை
வெள்ளி 21, ஜூலை 2023 3:41:52 PM (IST)

சலூன் மற்றும் அழகு கலை நிலையங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் முத்தையாபுரம் சுந்தர் நகரில் உள்ள வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கௌரவ தலைவர் கே.சதாசிவம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் இரா.பேச்சி முத்து கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பொதுச்செயலாளர் எஸ் நாகராஜ், சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிபிஎம் புறநகர செயலாளர் ராஜா, முத்தையாபுரம் பகுதி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார்.
கிளை தலைவராக சுந்தரம், செயலாளராக பட்டுராஜ், பொருளாளராக சந்திரன், துணைத் தலைவர்களாக ராஜா, சிவசுப்பிரமணியம், துணை செயலாளர்களாக சுமித்ரா,மரியா ஜாக்லின் ரோசி ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதனர். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கே.வேல்முருகன் ஜெயக்குமார் அஜய் முத்துமாரியப்பன் செல்வம் விக்னேஸ்வரி சபரிமலர் செய்து ரபியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்
முடி திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் ரூபாய் 3000 வழங்க வேண்டும். முடி திருத்தும் நலவாரியங்களில் முத்தரப்பு குழு அமைத்து செயல்படுத்திடவேண்டும். வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை அமைத்திட 5லட்சம் நிதி உதவி வழங்கிட வேண்டும் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்க நிதி உதவி வழங்கிட வேண்டும்.
முடி திருத்துவோருக்கும் அழகு கலை நிலையங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு திருமணம் உதவித்தொகை 50 ஆயிரம் வழங்கிட வேண்டும். சலூன் மற்றும் அழகு கலை நிலையங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி உரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










