» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!

ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:54:15 AM (IST)தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இயேசு கிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தபோது, பேரீச்சை மரத்தின் குருத்துகள், ஒலிவ மரத்தின் கிளைகள் மற்றும் லில்லி மலா்களை ஏந்தியபடி இயேசுவை முன்னால் போகச் செய்து மக்கள் அணிவகுத்துச் சென்றாா்கள். அதை நினைவுகூரும் வகையில், உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் குருத்தோலை ஏந்தியபடியும் ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றனா்.  சின்னக் கோயில் என அழைக்கப்படும் திருஇருதயங்களின் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் ஏராளமானோா் கலந்து கொண்டு கையில் குருத்தோலை பிடித்தவாறு பவனியாக ஆலயத்துக்கு சென்றனா். பின்னா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory