» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடந்தை குளவி கொட்டியதில் 5 மாணவிகள் காயம்: அரசு மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 23, மார்ச் 2023 4:09:38 PM (IST)
ஓட்டப்பிடாரத்தில் பள்ளியில் கடந்தை குளவி கொட்டியதில் காயம் அடைந்த 5மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் வெளியே வரும்போது மரத்தில் இருந்த கடந்தை குளவிகள் அவர்களை கொட்டியது. இதில் யோகலட்சுமி, முகிலா, மோனிகா, கல்பனா, எஸ்தர்ராணி ஆகிய 5 மாணவிகள் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஆணையளர் சிவபாலன், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் மாணவிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










