» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைதீர்ப்பாளர் நியமனம்

வெள்ளி 30, டிசம்பர் 2022 4:55:45 PM (IST)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைகளை தெரிவிக்க குறைதீர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக பூ.சேவகப்பாண்டி என்பவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண் 8925811330 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] ஆகும். பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்" என தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory