» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது: வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்!
திங்கள் 14, நவம்பர் 2022 8:06:24 PM (IST)

சாத்தான்குளம் அருகே திருமண விழாவிற்கு வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் கிராமத்தை சேர்ந்த பகீரதன் - ரோஸிட்டா தம்பதியினருக்கு திருமண விழாவை முன்னிட்டு, அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் திருமண விழாவிற்கு வைத்த பேனர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி அந்த பேனரில் செய்தி நாளிதழில் வரும் செய்தி தலைப்புகள் போல "சுப்பராயபுரத்தில் பரபரப்பு - வாலிபர் கைது" என்ற தலைப்பில் வினோதமான முறையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பேனரில் "பெண்ணின் மனதை திருடியது குற்றம்" எனவும் அந்தக் குற்றத்திற்கு முக்கிய சாட்சிகளாக 10 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களது புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றத்தை கண்டுபிடிக்க துப்பு கொடுத்தது மணமகன் குடும்பத்தினர் எனவும், இந்த குற்றத்திற்கு தண்டனையாக மூன்று முடிச்சு போடுவதை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)











VinsJan 24, 2023 - 08:34:22 PM | Posted IP 162.1*****