» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதிய இரட்டை அகல ரயில்வே பாதை பணிகள் : தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
செவ்வாய் 22, மார்ச் 2022 5:19:06 PM (IST)

கோவில்பட்டி - துலுக்கப்பட்டி ரயில்வே நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை அகல ரயில்வே பாதை பணிகளை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.
தென் தமிழகத்தில் அதிவேக ரயில்களை இயக்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரை தூத்துக்குடி இடையிலான 160 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ 11822 கோடி மதிப்பில் புதிதாக இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வாஞ்சி மணியாச்சி- தட்டப்பாறை, வாஞ்சி மணியாச்சி - கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி - கடம்பூர், கோவில்பட்டி - கடம்பூர் இடையே பணிகள் முடிவுற்று ஆய்வு செய்யப்பட்டு ரயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இதற்கு அடுத்தபடியாக கோவில்பட்டி முதல் துலுக்கப்பட்டி வரையிலான 33 கிலோமீட்டர் தொலைவிற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அந்தப் பணிகளை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். முதலில் கோவில்பட்டியிலிருந்து சாத்தூர் ரயில்வே நிலையம் வரையிலான முடிவுற்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தலைமையிலான குழுவினர் 8 மோட்டார் டிராலி வண்டியில் சென்று ஆய்வு செய்தனர்.
சிறிய, பெரிய பாலங்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே கேட்டுகள், புதிய இரட்டை ரயில் பாதை வலது மற்றும் இடது பக்க வளைவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட்டது. மதியம் சாத்தூர் முதல் கோவில்பட்டி ரயில்வே நிலையம் வரை ரயில்வே சோதனை ஓட்டமும், மாலையில் சாத்தூர் முதல் துலுக்கப்பட்டி வரையும் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது. ஆய்வில் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட இயக்குனர் கமலாகர ரெட்டி, ரயில்வே கட்டுமான முதன்மை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










