» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இஸ்ரேல் நாட்டின் மீதான நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக்கூடாது: ஈரான் எச்சரிக்கை

சனி 6, ஏப்ரல் 2024 4:21:43 PM (IST)



இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியாவின் தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் இஸ்லாமிய புரட்சி படை தளபதிகள் 2 பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் நாட்டின் பல நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதனால் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரும் தாக்குதலை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory