» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் : மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 20, மே 2024 5:54:37 PM (IST)
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, சங்கருடன் தேனி விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம், அவரது ஓட்டுநர் ராம்பிரபு ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா வழக்குக்காக சவுக்கு சங்கரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சவுக்கு சங்கரை 7 நாள் போலீஸில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின்னர், சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம். விசாரணை முடிந்து, புதன்கிழமை மாலை 3 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். போலீஸ் விசாரணையின் போது சவுக்கு சங்கரை காலை 8, மதியம் 2, இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் சந்தித்து பேசலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, சவுக்கு சங்கரை மதியம் 12 மணியளவில் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 22-க்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 12:43:35 PM (IST)

த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் கோவை வருகை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 26, ஏப்ரல் 2025 12:29:48 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:36:10 AM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை விட என்எல்சியால் பலமடங்கு கேடு: நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்!
சனி 26, ஏப்ரல் 2025 10:59:27 AM (IST)

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 4 பேர் பலி; முதல்வர் இரங்கல்: நிவாரண நிதியுதவி அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 10:54:25 AM (IST)
