» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரி மோதி முதியவர் படுகாயம்.. நா.த.க., போராட்டம்!!

திங்கள் 20, மே 2024 5:46:40 PM (IST)தென்கரை அருகே கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரி மோதி முதியவர் படுகாயம் அடைந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்து.

கன்னியாகுமரி மாவட்டம் தென்கரை ஊராட்சி குமாரகோவில் சந்திப்பு அருகே கனிமவளங்கள் ஏற்றி வந்த கனரக லாரி மோதியதில் இன்று காலை முதியவர் படுகாயம் அடைந்தார். இதைடுத்து அந்தலாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory