» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!

ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

spicSchool.jpg

தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியின் 53-வது பெற்றோர் தினவிழா பள்ளி வளாகத்தில் உள்ள இராசகோபாலன் கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். பள்ளித் தலைவர் பி.செந்தில்நாயகம், பள்ளிச் செயலாளர் டி.எஸ். பிரேம்சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் எல்.பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். 

விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. தமிழரின் பண்பாட்டைப் பறைசாற்றும் பரதநாட்டியத்துடன் கதக் மற்றும் மோகினி ஆட்டம் இணைந்த நடனம் மற்றும் வரவேற்பு நடனம் அமைந்திருந்தது.  'சட்டத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தும் தமிழ் நாடகமும், 'கல்வியே உயர்ந்த செல்வம்' என்பதை உணர்த்தும் நடனமும் நடத்தப்பட்டன. 

பெற்றோரைக் பெருமைப்படுத்தும் நடனம், சமயோஜித புத்தியால் எச்சூழலையும் வெல்லலாம் என்பதை விளக்கிய ஆங்கில நாடகம் மற்றும் மின்விளக்குகளை உடலின் மீது சுற்றி மாணவர்கள் ஆடிய நடனம் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory