» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
7,000 வாட் வரி வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தல் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:08:07 AM (IST)

தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் மீது நிலுவையில் உள்ள சுமார் 7,000 பழைய 'வாட்' வரி வழக்குகளை ரத்து செய்து, சமாதானத் திட்டம் கொண்டு வரக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அரசுச் செயலாளர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் (எ) ராஜா தலைமையில், மாநிலப் பொருளாளர் பீர் முகம்மது, மாநில அமைப்பாளர் எல்.எம். டேவிட்சன் மற்றும் மாநில இணைச் செயலாளர் உடன்குடி குணசீலன் ஆகியோர் அடங்கிய நிர்வாகிகள் குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்தனர்.
நிதித்துறை அரசுச் செயலாளர் சித்திக் மற்றும் வணிகவரித் துறை அரசுச் செயலாளர் குமரகுருபரன் ஆகியோரை நேரில் சந்தித்த அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் அளித்த மனுவில்: தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் மீது பழைய மதிப்புக்கூட்டு வரி (VAT) சட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள சுமார் 7,000 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
வணிகர்களின் நலன் கருதி நிலுவை வரிகளை எளிதாக முடிவுக்குக் கொண்டு வர ஏதுவாகச் சமாதான நடவடிக்கைகளைத் தொடங்கித் தீர்வு காண வேண்டும். என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட அரசுச் செயலாளர்கள், இது குறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)








