» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)
ஆறுமுகனேரியில் ஓய்வு பெற்ற ஊழியரின் பூட்டிய வீட்டின் கதவை உடைத்துத் திருட முயன்ற வழக்கில் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யு.சி காலனியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவியுடன் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காகக் கன்னியாகுமரியில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அடுத்த நாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் சுந்தரபாண்டியன் வீட்டின் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஊருக்குத் திரும்பி வந்து பார்த்த சுந்தரபாண்டியன், வீட்டில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதை உறுதி செய்தார்.
வீட்டின் கதவை உடைத்துத் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் சுந்தரபாண்டியன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இத்திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் காயல்பட்டினம் ரத்தினாபுரியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (36) மற்றும் முத்துசாமி (39) என்பது தெரியவந்தது.
இந்நிலையில், காயல்பட்டினம் பகுதியில் மற்றொரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவதற்காகச் சுற்றித் திரிந்த கார்த்திக்ராஜா மற்றும் முத்துசாமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துக் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)

7,000 வாட் வரி வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தல் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:08:07 AM (IST)

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)








