» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, கொடி பவனி கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழா நாளை 26-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா நாளைக் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், அதன் தொடக்க நிகழ்வாக இன்று மாலை கொடி பவனி நடைபெற்றது. பாப்பரசர் ஆண்டவர் பேராயரின் தூதுவரும், பேராலயப் பங்குத்தந்தையுமான மரிய வளன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பனிமய மாதாவிற்கான பல்வேறு காணிக்கைப் பொருட்களுடனும், பிரார்த்தனை கொடிகளுடனும் ஊர்வலமாகச் சென்று பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தக் கொடி பவனியைக் காண திரளான பக்தர்கள் திரண்டனர். இதனையொட்டி நகர் முழுவதும் போதிய காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)

திருச்செந்தூரில் பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : சுற்றுலாத்துறை இயக்குநர் நேரில் ஆய்வு!
சனி 25, ஜூலை 2026 3:11:25 PM (IST)








