» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நடைப்பயிற்சி சென்றவரை கல்லால் தாக்கி கொலை முயற்சி – சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 8:04:45 PM (IST)
ஏரல் அருகே நடைப்பயிற்சி சென்ற நபரைக் கல்லால் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டுச் செல்போனைப் பறித்துச் சென்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்குளம் – சிவகளை சாலையில் நேற்று ஒருவர் வழக்கம் போல் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், நடைப்பயிற்சி சென்றவரைத் திடீரெனக் கல்லால் தாக்கி, கொடூரமாகக் கொலை செய்ய முயன்றுள்ளார்.
மேலும், அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஏரல் காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இக்குற்றச் செயலில் ஈடுபட்டது ஏரல் பகுதியைச் சேர்ந்த முப்பிலிமாடன் மகன் ராஜூ (எ) ராஜபாண்டி (32) என்பதும், இவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜபாண்டியை காவல்துறையினர் இன்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கப்பலை கடத்திய 4 பேர் சிக்கினர் : சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையால் பரபரப்பு
வெள்ளி 24, ஜூலை 2026 8:36:12 PM (IST)

முன்விரோதத்தால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு – 2 பேர் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 8:07:14 PM (IST)

குஜராத்தில் வெள்ளப்பெருக்கு: தூத்துக்குடி – ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து!
வெள்ளி 24, ஜூலை 2026 7:32:45 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த 2 நாள் பயிற்சி நிறைவு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:06:10 PM (IST)

சோலார் ஆலையில் ரூ.1½ லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 24, ஜூலை 2026 4:47:27 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் அருந்திய நபர் உயிரிழப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 4:40:05 PM (IST)








