» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த 2 நாள் பயிற்சி நிறைவு!

வெள்ளி 24, ஜூலை 2026 5:06:10 PM (IST)

fisheriesSeminar.jpg

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், "அலங்கார மீன் வளர்ப்பு" குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் கடந்த ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமினை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் சீ. ஆ. சண்முகம் தொடக்கி வைத்தார்.

பயிற்சியின் போது  வணிக முக்கியத்துவம் வாய்ந்த அலங்கார மீன்கள், முட்டையிடும் மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன்களின் இனப்பெருக்கத் தொழில்நுட்பங்கள், தீவனம் மற்றும் தீவன மேலாண்மை, நீர்ச்சத்து மற்றும் நீர் மேலாண்மை, நோய் மேலாண்மை, சந்தைப்படுத்துதல், பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு போன்ற தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்புகள் நடத்தப்பட்டன:

மேலும், அலங்கார மீன் வளர்ப்பில் பங்கேற்பாளர்களுக்கு நேரடியாகப் பழக்கம் ஏற்படும் வகையில், விரிவான செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இப்பயிற்சியினை மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பொறுப்பு) கோ. அருள் ஒளி, உதவிப் பேராசிரியர்கள் வெ. கோமதி, பூ. மணிகண்டன் மற்றும் த. ஐயப்பன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

இப்பயிற்சியில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டார வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மூலம் பரிந்துரைக்கப்பட்ட 30 விவசாயிகள் கலந்துகொண்டு, நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு குறித்துத் தேவையான தொழில்நுட்ப அறிவையும் செய்முறைத் திறன்களையும் பெற்றனர். இப்பயிற்சி அவர்களுக்குப் புதிய தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று பயனாளிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory