» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தகராறில் விஷம் அருந்திய நபர் உயிரிழப்பு!

வெள்ளி 24, ஜூலை 2026 4:40:05 PM (IST)

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷ மாத்திரையை சாப்பிட்ட நபர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வஉசி தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுரேஷ் (42). மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த சுரேஷ், கடந்த 20ஆம் தேதி பன்றிக்கு வைக்கும் விஷ மாத்திரையைச் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory