» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குஜராத்தில் வெள்ளப்பெருக்கு: தூத்துக்குடி – ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து!
வெள்ளி 24, ஜூலை 2026 7:32:45 PM (IST)

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, தூத்துக்குடியில் இருந்து ஓகா செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 19568) ரத்து செய்யப்பட்டது.
ஓகாவில் இருந்து வர வேண்டிய இணை ரயில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மறுமார்க்கமாகத் தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தூத்துக்குடியில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவுக்கு வரும் ஜூலை 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:40 மணிக்கு புறப்பட வேண்டிய 'விவேக் எக்ஸ்பிரஸ்' ரயில் (வண்டி எண்: 19567) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதன் இணை ரயில் (வண்டி எண்: 19568) ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கப்பலை கடத்திய 4 பேர் சிக்கினர் : சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையால் பரபரப்பு
வெள்ளி 24, ஜூலை 2026 8:36:12 PM (IST)

முன்விரோதத்தால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு – 2 பேர் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 8:07:14 PM (IST)

நடைப்பயிற்சி சென்றவரை கல்லால் தாக்கி கொலை முயற்சி – சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 8:04:45 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த 2 நாள் பயிற்சி நிறைவு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:06:10 PM (IST)

சோலார் ஆலையில் ரூ.1½ லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 24, ஜூலை 2026 4:47:27 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் அருந்திய நபர் உயிரிழப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 4:40:05 PM (IST)








