» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண் கொடூர கொலை: மீனவர் கைது!

வெள்ளி 24, ஜூலை 2026 4:24:58 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, தலையில் தாக்கிக் கொலை செய்த மீனவரைத் காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (56). கணவரால் கைவிடப்பட்ட இவர், தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். தெருக்களில் கிடைக்கும் பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த முத்துலட்சுமி, கடந்த 15-ஆம் தேதி மகள் வெளியூருக்குச் சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அன்று இரவு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதையறிந்த அவரது மகள் சத்யா மற்றும் உறவினர்கள், கொலையாளியைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெறுவோம் எனக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த லோபஸ் என்பவரின் மகன் இன்னசென்ட் ரீகன் (34) என்பவர் முத்துலட்சுமியின் தலையில் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரைப் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட மீனவர் இன்னசென்ட் ரீகன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தூத்துக்குடியில் திருட்டு பைக்கில் சுற்றித் திரிந்துள்ளார். சம்பவத்தன்று திண்ணையில் தனியாகப் படுத்திருந்த முத்துலட்சுமியிடம் பணம் எதுவும் உள்ளதா எனப் பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, முத்துலட்சுமி விழித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த இன்னசென்ட் ரீகன், முத்துலட்சுமியின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இன்னசென்ட் ரீகன் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory