» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.22,970 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திலுள்ள சிவில் சப்ளை (வட்ட வழங்கல்) பிரிவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை தலைமையில் அதிகாரிகள் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, உரிய ஆவணங்களோ அல்லது கணக்கோ இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.22,970-ஐ லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர்.
கணக்கில் காட்டப்படாத இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாலுகா அலுவலகச் சிவில் சப்ளை பிரிவு ஊழியரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அரசு அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)

திருச்செந்தூர் புதிய பேருந்து நிலைய விவகாரம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 17, ஜூலை 2026 5:12:51 PM (IST)








