» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!

வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

சாத்தான்குளம் அருகே மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி, அவரது உறவினர்கள் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடன்குடி அருகே உள்ள ஞானியார்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயது மாணவி கொம்மடிக்கோட்டையிலுள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நடுவக்குறிச்சியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கிச் சென்று வந்த நிலையில், கடந்த ஜூலை 14 அன்று கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உறவினர் அளித்த தகவலின் பேரில், கோவையிலிருந்து வந்த தந்தை தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தட்டார்மடம் உதவி ஆய்வாளர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் செல்போன் இருப்பிடத்தைக் கொண்டு விசாரணை நடத்தினார். ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் இருப்பிடம் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது. காவல் துறையினரின் விசாரணை நகர்வுகளில் திருப்தியில்லாததால் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தட்டார்மடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) இசக்கித்துரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவியை மீட்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory