» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சிப் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்கு இயந்திரவியல் (Mechanical) மற்றும் ஆட்டோமொபைல் (Automobile) பிரிவுகளில் பொறியியல் பட்டம் (B.E) அல்லது பட்டயம் (Diploma) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பி.ஏ. (B.A.), பி.எஸ்சி. (B.Sc.), பி.காம். (B.Com) போன்ற இளங்கலைப் பட்டம் பெற்ற தமிழக மாணவர்களும் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளிலோ அல்லது மே 2026-லோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்ட (NATS) அதிகாரப்பூர்வ வலைதளமான https://nats.education.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 28, 2026 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் மண்டலப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)








