» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலருவி விரைவு ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வியாழன் 16, ஜூலை 2026 10:22:07 AM (IST)

TutiRailwayStation.jpg

தூத்துக்குடி - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெட்டி அமைப்புடன் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டி எண். 16791 தூத்துக்குடி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் வருகிற ஜூலை 20 ஆம் தேதி முதலும், மறுமார்க்கத்தில் வண்டி எண். 16792 பாலக்காடு - தூத்துக்குடி ரயில் ஜூலை 21 ஆம் தேதி முதலும் எல்.எச்.பி. பெட்டிகள் மூலம் இயக்கப்பட உள்ளன.

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் 1 கார்டு/லக்கேஜ் பெட்டி, 1 இரண்டாம் வகுப்பு லக்கேஜ்/மாற்றுத்திறனாளிகள் பெட்டி, 1 மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டி (3AC), 5 ஸ்லீப்பர் பெட்டிகள் (SL) மற்றும் 10 முன்பதிவு இல்லா பொதுப் பெட்டிகள் (Unreserved) இணைக்கப்பட்டுள்ளன.

பாலருவி விரைவு ரயிலை எல்.எச்.பி. கோச்சுகளாக மாற்றியமைத்ததற்கும், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மூன்றடுக்குக் குளிர்சாதனப் பெட்டியை (III A/C) இணைத்ததற்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்குத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory