» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ‘சமுத்திர சங்கமம்’ மீனவர் தொழிலாளர் நலப் பட்டறை!
புதன் 15, ஜூலை 2026 8:13:33 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) தேசிய வேளாண் அறிவியல் நிதி (NASF) உதவியுடன் "தமிழ்நாடு மீனவர் தொழிலாளர் நலன் – சமுத்திர சங்கமம்” என்ற தலைப்பில் ஒரு நாள் பங்குதாரர் பட்டறை நடைபெற்றது.
இந்தியக் கடல்சார் மீன்வளத் துறையில் தொழிலாளர் இடம்பெயர்வின் மாறிவரும் போக்குகள், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் உற்பத்தித் திறன் மீதான தாக்கங்கள் குறித்த ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் இப்பட்டறை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள உள்ளூர் மற்றும் புலம்பெயர் மீனவத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிலை, சுகாதாரச் சேவைகள், ரேஷன் வசதிகள், நலத்திட்டங்கள் மற்றும் சட்ட ஒழுங்குமுறைச் சார்ந்த தடைகள் குறித்து விவாதிக்க இந்த ஆலோசனை மேடை பயன்படுத்தப்பட்டது.
மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி முனைவர் ஆர்.நாராயணகுமார் வரவேற்றுப் பட்டறையின் நோக்கங்களை விளக்கினார். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகப் பிரிவின் மீன்வள ஆய்வாளர் எஸ்.கார்த்திக் ராஜா மற்றும் இந்திய மீனவர் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் ஜே.வின்சென்ட் ஜெயின் ஆகியோர் மீனவத் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.
மீன்வளக் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ஏ.சண்முகம் தலைமையுரை ஆற்றி, மீன்வளத் துறையின் நிலையான வளர்ச்சிக்குத் தொழிலாளர் நலக் கொள்கைகள் அவசியம் என்பதை வலியுறுத்தினார். உதவிப் பேராசிரியர் முனைவர் த.உமாமகேஸ்வரி தமிழ்நாட்டின் முக்கிய ஆராய்ச்சி முடிவுகளையும், தொழிலாளர் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் விளக்கினார்.
மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி முனைவர் ஷியாம் எஸ்.சலீம் கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்துக் கொள்கைப் பரிந்துரைகளைப் பெற்று நன்றியுரை வழங்கினார். இப்பட்டறையில் மீன்பிடித்தல், சந்தைப்படுத்தல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள 40 உள்ளூர் மற்றும் புலம்பெயர் மீனவத் தொழிலாளர்கள் பங்கேற்றுத் தங்களது சவால்களைப் பகிர்ந்து கொண்டனர். இக்கருத்துக்கள் எதிர்காலக் கொள்கை வடிவமைப்பிற்குப் பங்களிப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)









Ramasamy PetchimuthuJul 15, 2026 - 10:48:34 PM | Posted IP 162.1*****