» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கூட்டுறவு வங்கியில் துணிகரக் கொள்ளை முயற்சி : லாக்கரை உடைக்க முடியாதால் நகை தப்பியது
ஞாயிறு 5, ஜூலை 2026 2:28:21 PM (IST)
எட்டயபுரம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து லாக்கரைத் திறக்க முயன்ற துணிகரக் கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெள்ளையம்மாள்புரம் கிராம கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று மாலை 4:00 மணியளவில், வழக்கம்போல் பணிகள் முடிந்ததும் அங்கிருந்த எழுத்தர் மாரீஸ்வரி கட்டிடத்தின் கதவுகளைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை கூட்டுறவு சங்கச் செயலாளர் செல்வகுமார் (56), என்பவர் சங்கத் திறப்பிற்காக வந்துள்ளார். அப்போது கூட்டுறவு கடன் சங்கக் கட்டிடத்தின் முன் பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், அங்கிருந்த முக்கிய லாக்கரை பலவந்தமாக உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக லாக்கர் உடையாததால் உள்ளே இருந்த பணம் மற்றும் நகைகள் தப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் விரைந்து தடயங்களைச் சேகரித்தனர். லாக்கரை உடைக்க முடியாததால் சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் பத்திரங்கள் தப்பியது. இத்துணிகரக் கொள்ளை முயற்சி குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வடமாநில வாலிபர் மர்ம மரணம் : போலீஸார் விசாரணை
ஞாயிறு 5, ஜூலை 2026 2:19:33 PM (IST)

தூத்துக்குடி ஆலயத்தில் நிதிமுறைகேடு புகார் : சபை மக்கள் ஆர்ப்பாட்டம்- பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 2:03:21 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

லஞ்சமில்லா அரசை நடத்தும் ஜோசப் விஜய் அரசுக்கு நன்றி: தூத்துக்குடி காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:54:27 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 11:35:30 AM (IST)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் சாலையோர முள் செடிகள் அகற்றும் பணி!
ஞாயிறு 5, ஜூலை 2026 11:28:44 AM (IST)








