» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் அருகே சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது!

ஞாயிறு 5, ஜூலை 2026 11:21:36 AM (IST)

சாயர்புரம் தேரிரோடு டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 70 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தேரிரோடு டாஸ்மாக் கடைக்கு அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் மது பாட்டில்கள் பதுக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சட்டவிரோத மது விற்பனைக்காகப் பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த ஒருவரைப் போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர், சாயர்புரம் அருகே உள்ள கூடம்புளி, சாமிகோவில் தெருவைச் சேர்ந்த வேல்துரை மகன் பெருமாள் (35) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் பெருமாளைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 70 மது பாட்டில்களைக் பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory